உலகக்கிண்ணத்தை நாமே வெல்வோம் – தென் ஆப்பிரிக்கா

நாங்கள் முழுத்திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் உலகக்கிண்ணத்தை வெல்வோம் என்று தென்ஆப்பிரிக்க அணித்தலைவர் டுபிளசி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டி20 அரங்கில் தென்ஆப்பிரிக்கா சிறந்த நிலையில் உள்ளது. அந்த அணியில் டுபிளசி, டிவில்லியர்ஸ், மில்லர், அம்லா, டி காக் என பல அதிரடி வீரர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்க அணியின் தலைவர் பாப் டு பிளிஸ்சிஸ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ”எங்களது திறமைக்கு ஏற்ப முழு திறமையை வெளிப்படுத்தினால், கிண்ணத்தை வெல்ல முடியும் என்பதை அறிவோம்.

உலகக்கிண்ணத்தை வெல்ல எல்லா அணிக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இந்திய அணி விளையாடி வரும் விதத்தை பார்க்கும் போது, அவர்களுக்கு வாய்ப்பு சற்று அதிகமாக வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்.

கடந்த காலங்களில் இந்திய துணை கண்டத்தில் நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம்.

மேலும், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் சற்று ஏமாற்றம் அளித்தாலும், உலகக்கிண்ணத்தில் இந்திய மண்ணில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் வந்துள்ளோம்“ என்று கூறியுள்ளார்.