தங்கொட்டுவை பிரதேசத்தில் வான் ஒன்றுக்குள் எரியூட்டப்பட்ட நிலையில் 5 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸ் குழுவினர் நாலவலான பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் விசாரிக்க இருவரை கைது செய்துள்ளனர்.
குறித்த வேன் வண்டியினை ஓட்டிச்சென்ற கபில எனப்படும் குறித்த நபரானவர் குறித்த நிகழ்வுக்கு முன்தினம் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட நபரினது வீட்டில் மதுபானம் அருந்தியுள்ளதாகவும் பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கைதாகியுள்ள இருவரும் தந்தையும் மகனும் என்பதுடன், கடந்தகாலங்களில் கபில எனப்படும் நபர் இவர்களிடம் கப்பம் கோரியுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
இது குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவினை தொடர்பு கொண்டு வினவியபோது, குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.