அத்துடன், குறித்த இடத்திலிருந்து சிறைச்சாலையை அகற்றிவிட்டு பதுளை-ஸ்பிரிங்வெளி பாதையில் சிறைச்சாலையை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சிறைச்சாலை நிர்மாணிப்பதற்கான தேவையான பணமும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரத்தானிய காலனித்துவத்தின் கீழ் ஊவா மக்கள் தேசிய விடுதலை இயக்க போராட்ட வீரர்களை கைது செய்து அடைப்பதற்காக குறித்த சிறைச்சாலை 1834 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.