நேற்று(14) இடம்பெற்ற பயிற்சி போட்டி ஒன்றில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியிடம் 15 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை பெற்றது.
பதிலளித்த இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இந்நிலையில், உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடரில் இலங்கை அணி பங்குகொள்ளும் முதல்போட்டி நாளை மறுதினம் கொல்கத்தாவில் இடம்பெறவுள்ளது.
குறித்த, இந்தபோட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.