எகிப்து நாட்டுக்கு சொந்தமான எகிப்து ஏர் போயிங் 737-800 ரக விமானம் அந்நாட்டு தலைநகர் கெய்ரோவில் இருந்து கடந்த வெள்ளியன்று புறப்பட்டது. இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு புறப்பட்ட அந்த விமானத்தில் 71 பயணிகள் இருந்தனர்.
லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிரங்கும் போது விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியது இதனால் விமானம் குலுங்கியது இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்
எனினும் விமானி சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கினார். பறவையின் மோதல் காரணமாக விமானத்தின் முன் பக்கத்தில் பெரிய அளவில் ஓட்டை ஏற்பட்டது.
இதையடுத்து அந்த விமானம் மீண்டும் கெய்ரோவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் காரணமாக ஹீத்ரோ விமான நிலையத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.