பள்ளிவாயல் மீதான தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டும்: என்.எம்.அமீன்

பொரல்லை பள்ளிவாயல் தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும்.

தனிப்பட்டவர்களுடனான பிரச்சினைகள் ஒரு சமூகத்தின் சொத்தாக கருதப்படும் சமயத்தளம் மீது தாக்குதல் நடாத்துமளவுக்கு யாரையும் தூண்டக் கூடாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்தார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

இது திட்டமிடப்படாத ஒரு வன்செயல் எனக் கருதப்பட்டாலும் கூட, எந்தவொரு சமயத்தினதும் மதஸ்தானங்கள் தாக்கப்படுவதை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

சம்பந்தப்பட்டவர்களுக்கு எடுக்கும் நடவக்கை இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.

கடந்த அரசாங்க காலத்தில் பள்ளிவாயல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முஸ்லிம்களுக்கு பல கசப்பான அனுபவங்கள் உள்ளன. தற்பொழுது, புனித ரமழான் முஸ்லிம்களை எதிர்நோக்கியுள்ளது. இக்காலத்தில் முஸ்லிம்கள் பள்ளிவாயலுடன்
அதிகம் தொடர்புபடுகின்றனர்.

முன்னைய காலங்களில் நடைபெற்றதைப் போன்று இது ஒரு தொடர் சம்பவமாக இல்லாதிருந்தாலும் கூட, கடந்த காலங்களைப் போன்று சமயக் கடமைகளுக்கு தடங்கள் வராமல் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.