T20 உலகக்கிண்ணம் – முதல் வெற்றியை பதிந்தது நியூஸி (VIDEO)

இந்தியாவில் நடைபெற்று வரும் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது.
நாக்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி தனது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18.1 ஓவர்களில் 79 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆண்டர்சன் 34 ஓட்டங்களை எடுத்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக 30 ஓட்டங்களை அணியின் தலைவர் தோனி பெற்றார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=ckB0fLm0qf8″ width=”560″ height=”315″]