இளவயதுத் திரு­ம­ணங்கள் அதிகரிப்பு

வெல்­ல­வாய பிர­தேச செய­லகப் பிரி­வு­களில் அதி­கஷ்ட மற்றும் கஷ்டப் பிர­தே­சங்­களில் சிறு­வ­யதுத் திரு­ம­ணங்கள் இடம்­பெற்று குறைமாத சிசுப் பிர­ச­வங்­களும் இடம்­பெற்று வரு­வ­தா­கவும் இவற்­றுக்கு பெற்­றோரும் ஒரு கார­ணமா­கவுள்­ள­தாக வெல்­ல­வாய பிர­தேச வைத்­திய அதி­காரி டாக்டர் ஜே.எம்.விம­ல­சூ­ரிய தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இப்­பி­ர­தே­சத்தின் சேனைகள் மற்றும் வயல்­வெ­ளி­களில் அதிக குடும்­பங்கள் எந்­த­வித கட்­டு­ப்பா­டு­மின்றி வாழ்ந்து வரு­வதால் சிறு வயது முதல் கூலித்­தொ­ழி­லுக்­காக கொழும்பு மற்றும் இதர நகரப் புறங்­க­ளி­லுள்ள விடுதி­க­ளிலும் ஆடைத் தொழிற்­சா­லை­க­ளிலும் பணி­பு­ரிந்து வரு­வதால் பலர் இளம் வய­தி­லேயே திரு­மணம் முடித்து இப்­பி­ர­தே­சத்­திற்கு வரு­கின்­றனர். இவர்­க­ளது கர்ப்­ப­கா­லத்தில் ஆரம்ப சிகிச்­சைகள் இடம் பெறு­வதில்லை. இதனால் பலர் குறை­மாத பிர­ச­வங்­க­ளுக்­குள்­ளாகி வரு­கின்­றனர்.

இதனை பெற்­றோர் அறிந்­தி­ருப்­பது மிகவும் அவ­சி­ய­ம். எனவே, இள வயதுத் திரு­ம­ணங்கள் இப்­பி­ர­தே­சத்தில் முற்­றாக ஒழிக்­கப்­பட வேண்­டி­யது அவசியம். தங்­க­ளது பிள்­ளைகள் எங்கு தொழில் புரிந்­தாலும் அவர்கள் தொடர்­பாக கூடிய கவனம் செலுத்த வேண்டும். அப்­படி இப் பிர­தே­சத்­திற்கு வெளியே திரு­மணம் முடித்தாலும் ஆரம்ப கர்ப்பகால அட்டையொன்றினை இப்பிரதேச அரச தாதியின் ஊடாக அவை முறையாகப் பதியப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.