விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சி.எஸ்.என். தொலைக்காட்சி அலைவரிசையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஷாந்த ரணதுங்கவிற்கு கடுவலை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் அவரை விடுதலை செய்ய கடுவலை நீதவான் நேற்றைய தினம்(16) உத்தரவிட்டுள்ளார்.
நிஷாந்தவின் பிணை குறித்து கடுவல நீதிமன்றே தீர்ப்பு வழங்க வேண்டும்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிஷாந்த ரணதுங்கவிற்கு பிணை வழங்குவதற்கு கடுவலை நீதவானுக்கு அதிகாரம் இருப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நிஷாந்த ரணதுங்கவிற்கு பிணை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவிற்கான தீர்ப்பை வழங்கும் போது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.பீ.பி.எஸ். மொராயஸ் இவ்வாறு அறிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இந்த வழக்கில் ஏனைய சந்தேகநபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அண்மையில் பிணை வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.