இந்தியாவில் செயற்படும் மற்றுமொரு சிறுநீரக மோசடி வலையமைப்பு, இலங்கையுடன் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குஜராத்தின் ஆனந் மாவட்டத்தில் சிறுநீரக மோசடி தொடர்பிலான வலையமைப்பைச் சேர்ந்த மூவரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
27 வயதான இளைஞர் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிறுநீரகத்தை விற்கும் நோக்குடன் பாதிக்கப்பட்ட ஐவர் இலங்கைக்கு சென்றதாக இந்திய பொலிஸார் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட சௌத்ரி என்ற நபர் ஆயுர்வேத மருத்துவராக பணியாற்றுகின்ற போதிலும் அவரிடம் அது குறித்த பட்டங்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.