மஹிந்த நிச்சயம் பேரணிக்கு வருவாராம்!

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இன்று ஏற்பாடு செய்துள்ள மக்கள் பேரணியில் தான் கலந்து கொள்ளவுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிலர் இது தொடர்பில் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் கொழும்பில் இன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணியில் தான் நிச்சயம் கலந்துகொள்ளவுள்ளதாக, தனது ட்விட்டர் கணக்கில் அவர் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை இந்த மக்கள் பேரணிக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.