கடந்த மாதம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் ஹூசைன் இலங்கை வந்த போது, அவருக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக தெரிவித்து கறுவாத்தோட்டம் பொலிஸார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்காக முன் அனுமதி மற்றும் ஒலிபெருக்கி அனுமதி என்பன பெறப்படவில்லை என்று பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.