ஆஸி அணியினை வீழ்த்தியது நியூசிலாந்து

உலக கிண்ண இருபதுக்கு இருபது போட்டி தொடரின் நேற்று(18) இடம்பெற்ற மற்றும் ஒரு போட்டியில் நியூசிலாந்து அணி அவுஸ்திரேலிய அணியை தோற்கடித்தது.

தர்மசாலாவில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 8 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.