இந்த ஒழுக்கக் கோவை தொடர்பிலான திட்ட வரைவு ஏற்கனவே பூர்ததியாகியுள்ளது.
நாடாளுமன்ற கலரியில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் அமர்வுகளை பார்வையிடுவதாகவும், இதன் போது ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தகாத வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி வருவதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் சபாநாயகர் ஏற்கனவே பல தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த எச்சரிக்கைகளை மீறி சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொள்வதனால், ஒழுக்கக் கோவை ஒன்றின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்ததாக மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தேச ஒழுக்கக் கோவை கட்சித் தலைவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
கட்சித் தலைவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதன் பின்னர், இந்த ஒழுக்கக் கோவை வெளியிடப்படவுள்ளது.
எப்போது இந்த ஒழுக்கக் கோவை வெளியிடப்படும் என்ற நிச்சயமான திகதிகள் பற்றிய விபரங்களை சபாநாயகர் வெளியிடவில்லை.