பிரஸ்ஸல்ஸ் குண்டு வெடிப்பு – ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸின் செவென்டம் (Zaventem) விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்திலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் பலர் உயிரிழந்தனர்.

முன்னதாக விமான நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தற்கொலைப்படை தாக்குதல் என்று அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியது.

இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்தை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

கடந்த நவம்பரில் பாரிஸ் நகரில் நடந்த குண்டு வெடிப்பு குற்றவாளிகள் பிரசல்ஸ் நகரை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், குறித்த இந்த விவரம் வெளியான 4 நாட்களில் பெல்ஜியத்தில் இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.