ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்திருக்கும் இரு படங்கள், நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும், குற்றம் கடிதல். இதில் நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் படத்தில் அருள்நிதி, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்திருந்தனர்.
குற்றமே நடக்காத ஊரில் நாலு போலீஸுடன் ஒரு காவல் நிலையம் இயங்கி வருகிறது.
குற்றமே இல்லாத ஊரில் எதற்கு காவல்நிலையம் என்று அங்கிருக்கும் நான்கு காவலர்களையும் வேறு ஊருக்கு மாற்ற முடிவாகிறது.
அந்த ஊரை பிரிய நான்கு பேருக்கும் விருப்பமில்லை. ஊரில் ஏதாவது குற்றங்கள் நடந்தால் மட்டுமே அவ்வூரில் இருக்க முடியும் என்ற நிலையில் அவர்கள் என்ன செய்கிறார்கள், அமைதியான ஊர் எப்படி மாறுகிறது என்பது படத்தின் கதை.
சுவாரஸியமான கதையாக இருந்தாலும் படமாக்கியதில் பலருக்கு திருப்தியில்லை, அதனால் படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. குற்றம் கடிதல் தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்ற படம்.
இந்த இரண்டையும் ஜுன் 19 வெளியிட ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்ப்பரேஷன் திட்டமிட்டுள்ளது. ரசிகர்கள் மீது