மேலும், இந்த எதிர்ப்பு பேரணியில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், தொழிநுட்பவியலாளர்கள், கலைஞர்கள்,கணக்காளர்கள்,மனிதவள ஆர்வலர்கள் உள்ளிட்ட 70 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துக் கொள்ளவுள்ளதாக ஒன்றிணைந்த தொழிநுட்ப வல்லுனர்களின் அமைப்பின் பணிப்பாளரும்,பொறியியலாளருமான உபாலி ரத்னாயக தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தியாவுடன் செய்துகொள்ளவிருக்கும் குறித்த எட்கா ஒப்பந்தத்தினால் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என பலமுறை அரசாங்கத்திடம் வலியுறுத்தியும் அரசாங்கம் அவற்றை கவனத்திற் கொள்ளாமல் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில் அதிக அக்கறை காட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த எதிர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.