மசாஜ் நிலையங்கள் குறித்து புதிய சட்டமூலம்

மசாஜ் நிலையங்கள் சம்பந்தமாக புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டுவர இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்நிலையங்களை பரிசோதனை செய்யும் போது சட்டரீதியான சிக்கல்கள் இருப்பதனால் புதிய சட்டமூலம் ஒன்றை முன்வைக்க இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால கூறினார்.

எய்ட்ஸ் தவறான நம்பிக்கை மற்றும் எமது நாளைய நாள் என்ற தொனிப் பொருளில் சுகாதார கல்விக் காரியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இவ்வாறு கூறினார்.

குறித்த சட்டமூலம் தற்சமயம் சட்ட வரைஞர் திணைக்களத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதன்படி அந்த சட்டமூலம் குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் மசாஜ் நிலையங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுப்பதாக டாக்டர் பாலித மஹிபால மேலும் கூறினார்.