சன்னி லியோனின் பிரவேசத்துக்குப் பிறகு ராக்கி சாவந்தின் பைத்தியக்கார ஸ்டேட்மெண்ட்டுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.
இல்லையென்றால், சுவாரஸியம் குறையும் போது ராக்கியின் வாயை கிளறி எதையேனும் பெற்று பத்திரிகைகளில் பிரசுரித்து வந்தனர். இப்போது ராக்கியின் இடத்தில் சன்னி லியோன்.
சன்னியின் மீது கலாச்சாரத்தை காலி செய்கிறார் என்ற குற்றச்சாட்டு வீசப்பட்டு போலீஸ் நிலையம்வரை அவரை கொண்டு சென்றனர் சில கலாச்சார வாட்ச்மேன்கள். இந்த தைரியத்தில் ராக்கி சாவந்தும் சன்னி என்ற பந்தை தூக்கி அடிக்க ஆரம்பித்துள்ளாராம் .
ஆபாசப் படத்தில் நடித்து வந்த சன்னி லியோனை ஆடை உடுத்த வைப்பதற்காக பாலிவுட்டில் பணம் தருகிறார்கள்.
அவர் வந்த பிறகுதான் அவருக்கு ஈடுகொடுக்க என்னைப் போன்றவர்கள் அதிக கவர்ச்சி காட்ட வேண்டியுள்ளது என்று சகட்டுமேனிக்கு சதாய்த்திருக்கிறார்.
அத்துடன், சன்னி லியோன் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என்று புதிய பிரகடனத்தையும் வெளியிட்டுள்ளார்.