வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவான், ரோஹித் சர்மா எழுச்சி பெறுவர் என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சங்கக்காரா தெரிவித்திருந்தார்.
NDTV இனது ஊடக சந்திப்பின் போதே சங்கக்கார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூருகியில்; இந்தியா- வங்கதேச அணிகள் மோதும் உலகக்கிண்ண டி20 போட்டி நேற்று பெங்களூரில் இடம்பெற்றது.
இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. என்றாலும் ஒருவாறு ஒரு ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியினை இந்தியா தன பக்கம் சாய்த்துக் கொண்டது.
இவ்விரு அணிகளின் மோதல் குறித்து குமார் சங்கக்கார கூறுகையில், ”இந்தப் போட்டி அதிக எதிர்பார்ப்புடனே பார்க்கப்பட்டது. சமீப காலமாக வங்கதேசம் சிறப்பாக ஆடி வருகிறது.
அதேசமயம் இந்திய அணி அனுபவ அணியாக இருக்கிறது. ஷிகர் தவான், ரோஹித் சர்மா போன்ற அதிரடி தொடக்க வீரர்கள் அந்த அணியில் இருக்கிறார்கள்.
ஷிகர் தவான், ரோஹித் சர்மா எழுச்சி பெற வேண்டிய நேரமும் வந்து விட்டது. கோஹ்லியும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும், அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க இந்திய அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஓட்ட விகிதம் (-0.895) மிகவும் மோசமாக உள்ளது. நியூசிலாந்து அணி ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் மற்றொரு இடத்துக்கு இந்தியாவுடன், பாகிஸ்தான் (+0.999), அவுஸ்திரேலியா (+0.108) ஆகிய அணிகளும் மல்லுக் கட்டுகின்றன.
இதனால் வங்கதேசத்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் அதிக ஓட்ட விகிதத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருந்தாலும் ஒரு ஓட்ட வித்தியாசத்திலேயே இந்தியா வெற்றியீட்டியது.