பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று(27) இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில் 60-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் லாகூரில் தென்மேற்கு பகுதியில் உள்ள குல்சான் – இ-இக்பால் பார்க் என்ற பகுதியில் சிறுவர் பூங்காவொன்றிலேயே நேற்று மாலை இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.
குண்டுவெடிப்பு நடைபெற்ற பூங்காவில் சிறார்கள், பெண்கள் உட்பட பலர் நிறைந்திருந்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஐ தாண்டியுள்ளனர். இருப்பினும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று மேலும் அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தான் பொலிஸ் தரப்பில் இது ஒரு தற்கொலைப்படை தாக்குதல் எனவும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.