குண்டு யானை’ என்று திட்டியதால் விவாகரத்து

2012ஆம் ஆண்டு குடும்­ப­நல நீதி­மன்றம் விவாகரத்து அளித்த தீர்ப்பை எதிர்த்து மனைவி தரப்பில் டில்லி மேல்­நீ­தி­மன்­றத்தில் மேன்­மு­றை­யீடு செய்­யப்­பட்­டது.

மனை­வியால் அடக்­கு­மு­றைக்கு ஆளா­ன­தா­கவும், தன்னால் தாம்­பத்ய உறவில் திருப்­தி­ய­ளிக்க முடி­ய­வில்லை என மனைவி குற்­றம்­சாட்­டு­வ­தா­கவும் கணவன் தரப்பில் புகார் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதில், கணவன் தரப்பு வாதத்தை ஏற்று விவா­க­ரத்து அளிக்­கப்­பட்­டது.
குடும்­ப­நல நீதி­மன்றம் தெளி­வற்ற வகை­யிலும், குறிப்­பி­டத்­தக்க குற்­றச்­சாட்­டுகள் இல்­லா­மலும் விவா­க­ரத்து அளித்­துள்­ள­தாக மேன்­மு­றை­யீட்டு மனுவில் மனைவி குறிப்­பிட்­டி­ருந்தார்.

இவ்­வ­ழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­போது ‘யானை’, ‘குண்டு யானை’ போன்ற வார்த்­தை­களால் மனைவி தன் குண்­டான கண­வனை மரி­யாதை இல்­லாமல் அழைத்­துள்ளதனால், அவரின் சுய­ம­ரி­யாதை, மதிப்பு ஆகி­யவை பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

மனைவி தன் கண­வனை அறைந்­த­துடன், வீட்டை விட்டு வெளி­யே­றும்­படி கூறி­யுள்ளார்” இது­போன்ற வார்த்­தைகள் திரு­மண உறவை உடைக்க வல்­லவை என கூறி நீதி­மன்றம் விவா­க­ரத்து வழங்கி தீர்ப்­ப­ளித்­தது.

“மண்­ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு, கணவன் மற்றும் அவ­ரது குடும்­பத்­தினர் மீது வர­தட்­சணைக் கொடுமை புகார் அளிக்கப்போவதாக மனைவி மிரட்டியுள்ளார்.

மேலும், கணவரின் சொத்துகளை தன் பெயரில் மாற்றிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், தாம்­பத்ய உறவு வைத்துக் கொள்ள விரும்பி மனை­வியை அணு­கி­ய­போது, அவர் அடித்து துன்­பு­றுத்தி, காயப்­ப­டுத்­தி­ய­தா­கவும்” கணவன் தரப்பில் புகார் தெரி­விக்­கப்­பட்­டது.