இலங்கை அணியினர் தோல்வியின் வெறியில் ஊடகங்களை அவமதித்தது இப்படித்தான்

இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான போட்டியானது நேற்று(28) நடைபெற்று முடிந்த பின்பு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அணியின் கனிஷ்ட வீரரான ஜெப்ரி வெண்டசே இனால் ஊடகங்களுக்கு பதிலளிக்க வைத்தமையானது ஊடகங்களை கேலிக்கு இட்டு செல்லும் விதமாக அமைந்ததாக ஊடகங்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சந்திப்பில் இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் பங்குகொள்ளாது ஜெப்ரி வெண்டசே பங்குபற்றியமை வெளிநாட்டு ஊடகங்களுக்கு முகத்தில் அடித்தாற்போல் என வெளிநாட்டு ஊடகங்கள் மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா கடந்த போட்டிகளில் தோல்வியினை தழுவியபோதும் ஊடக சந்திப்பின் போது அதன் அணித்தலைவர் டூப்லசிஸ் வருகை தந்திருந்தமையினையும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை உலக்கிண்ண போட்டிகளில் இருந்து விலகும் இறுதி ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு சொதப்பியதும், பெரும் அவமானம் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.