மியன்மாரின் புதிய ஜனாதிபதியாக டின் யோவ் பதவிப் பிரமாணம்

மியன்மாரில் புதிய ஜனாதிபதியாக டின் யோவ் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

டின், ஆன் சான் சூ கீயின் ஜனநாயகத்திற்கான தேசிய கட்சியின் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

50 ஆண்டுகளின் பின்னர் ஜனநாயக ரீதியில் நியமிக்கப்பட்ட முதலாவது சிவில் தலைவர் டின் யோவ் எனத்தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட காலமாக மியன்மாரில் இராணுவ ஆட்சி நிலவி வந்தமையும், அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆன் சான் சூ கீ, டின் யோவ் உள்ளிட்டவர்களின் கட்சி வெற்றியீட்டியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஆன் சான் சூ கீ ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது என்ற காரணத்தினால், டின் யோவ் ஜனாதிபதியாக கடமையாற்ற உள்ளார்.