கூட்டு எதிர்க்கட்சியினரின் ஜெனீவாவிலான போராட்டம் இன்று..

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று(31) ஜெனீவாவில் போராட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் படைவீரர்களை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் நல்லாட்சி அரசுக்குஎதிராகவே குறித்த இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

மேலும், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் கூட்டு எதிர்க்கட்சியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடனேயே இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளதோடு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவா காரியாலயத்திற்கு எதிரில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இன்று நண்பகல் 12.00 மணிக்கு இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக கட்சித் தரப்பு ஊகித்துள்ளது.

அத்துடன்,குறித்த போராட்டத்திற்கு சுவிட்சர்லாந்து பொலிஸாரின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.