புகையிரத கடவை சேவையாளர்கள் இன்று வேலைநிறுத்தத்தில்..

பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் பணிபுரிவோர் இன்று(31) காலை முதல் தனது கடமைகளில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளனர்.
தமது மாதாந்த வேதனத்தை அதிகரிக்கக் கோரியே இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை 700 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் நாடளாவிய ரீதியில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த புகையிரத கடவைகளில் 2061 சேவையாளர்கள் பணிபுரிவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சேவையாளர்களின் நாளாந்த வருமானம் 250 ரூபாய் என்றும்,இந்த வேதனத்தை அதிகரிக்கக் கோரியே தாம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.