கட்சியின் ஒழுக்காற்று விதிகளை மீறியதாக தெரிவித்து குறிப்பிட்ட 10 பேருக்கு எதிராக ஒழுக்காற்றுக் குழு நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருந்தது.
கடந்த 29ம் திகதி விசாரணைக்காக ஒழுக்காற்றுக் குழு முன் ஆஜராகுமாறு இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், இவர்கள் ஆஜராகாது கட்சியின் தீர்மானத்தைப் புறக்கணித்துள்ளனர்.
இன்னும், எதிர்வரும் தேர்தலிலும் இவர்களுக்கு வேட்பாளர் பதவி வழங்காதிருக்கவும் கட்சி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.