தோல்வி குறித்து ஆஸி.ஊடகவியலாளரின் தோளில் கைபோட்டு தோனி கூறியது இதுதான்..

2016, இருபதுக்கு இருபது உலக்கிண்ண இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவு அணிகள் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது குறித்து இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி ஊடகங்கள் முன்னிலையில் நடந்து கொண்ட விதமானது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நிகழ்வில் அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் சாமுவேல் பெரிஸ்; தோனியிடம் , இதன்பிற்பாடும் போட்டிகளில் பங்குபற்றுவீர்களா? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளிக்காது தோனி, குறித்த ஊடகவியலாளரை தமதருகில் வந்தமருமாறு அழைத்துள்ளார்.

பிற்பாடு, தான் அணியிலிருந்து விலகுவதற்கு உங்களுக்கு அவசியமாகின்றது என்றால், இந்திய அணிக்கு விளையாட உங்களது பிள்ளையா அல்லது சகோதரரா வருவார்?? என ஊடகவியலாளரை பார்த்து கேள்வி கேட்டுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த உரையாடலில் தோனி சிடுமூஞ்சாய் இல்லை என்பதே அதிசயம்..

[youtube url=”https://www.youtube.com/watch?v=zOL1a0qPm14″ width=”560″ height=”315″]