ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று(04) மாலை நடைபெற்றது.
கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பு இரண்டு மணித்தியாலங்கள் வரையில் நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது எதிர்வரும் மே தின பேரணியை காலியில் நடத்த தீர்மானிக்கப்பட்டதாக, கட்சியின் பொது செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த முறை மே தினத்தை தென்னிலங்கையில் நடத்துமாறு பலர் கோரிய நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை நியமிக்கும் போது ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து, கட்சிக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளவும் இணங்கப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.