மஹிந்த யாப்பா ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று காலை பாரிய இலஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும்  ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் விவசாயதுறை அமைச்சராக இருந்த போது ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்சி நிறுவனத்தில்  இடம்பெற்றதாக கூறப்படுகின்ற அனுமதியின்றி வாகனங்களை பயன்படுத்தியமை மற்றும் மேலும் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்காகவே இன்று  ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக ஆணைக்கழுவின் செயலாளர் எவ். டப்ளியூ குணதாச தெரிவித்தார்.