பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஆறு பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
குளவி கொட்டுக்கு இலக்கான ஆறு பெண்களில்மூவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு ஏனைய மூவரும் சிக்சிசை பெற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.