அமெரிக்க சுதந்திர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டம் பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்களின் தொலைபேசி உரையாடல் விவரங்களை பதிவு செய்வதற்கு கட்டுப்பாடு விதிக்க வகை செய்கிறது.
கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்க வர்த்தக மையம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களின் தொலைபேசி உரையாடல் விவரங்களை அந்நாட்டு தேசிய பாதுகாப்பு அமைப்பு சேகரித்து வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு நிலவியதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நடைமுறையைக் கட்டுப்படுத்த வகை செய்யும் அமெரிக்க சுதந்திர சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்ற செனட் சபையில் நேற்று முன்தினம் இரவு நிறைவேற்றப்பட்டது.