சோனியா அகர்வாலை தேடிப்பிடித்த காமெடி நடிகர்

தனுஷ், சிம்பு என இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட சோனியா அகர்வால் திடீரென்று இயக்குனர் செல்வராகவனை மணந்து செட்டிலானார். சில வருடங்களிலேயே மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். மீண்டும் படங்களில் நடிக்க முயன்றபோது சோனியாவுக்கு வாய்ப்பு தர பலரும் தயக்கம் காட்டினார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘வானம்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ படத்தில் ஹீரோயினாக வேடம் கிடைத்தது. ‘பாலக்காட்டு மாதவன்’ படத்தில் விவேக் ஜோடியாக நடித்தார். அதன்பிறகு அவரை கோலிவுட்டில் யாரும் கண்டுகொள்ளவில்லை.இனி வாய்ப்பு வராது என்று எண்ணிய சோனியா தனது சகோதரருடன் சேர்ந்து ஜிம் தொடங்கி அந்த தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் இருக்கிறார். யாரும் கண்டுகொள்ளாமலிருந்த சோனியா அகர்வாலை தேடிபிடித்து தான் நடித்து வரும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்திருக்கிறார் சந்தானம். சமீபத்தில் அவர் நடித்தகாட்சி படமாக்கப்பட்டது. இதேபடத்தில் ஹீரோ பிரசன்னாவும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.