மேற்க்.தீவுகள் அணித்தலைவர் சமி’யின் பெயரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இருபது இருபது உலக்கிண்ண போட்டிகள் இரண்டில் கிண்ணத்தை வெல்ல அணித்தலைமைப் பொறுப்பு வகித்த டேரன் சமியின் பெயரில் மைதானமொன்றினை பெயரிட சாந்த லூயிசா கிரிக்கெட் நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு உரித்தான சாந்த லூசியாவிலுள்ள “பீயுசெஜோயூர்” மைதானமே இவ்வாறு சமியின் பெயரில் ‘டேரன் சமி சர்வதேச மைதானம்’ எனப் பெயரிடப்பட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

டேரன் சமி ஷானத் லூசியா வாசி என்பதுடன், குறித்த மைதானத்தின் ஒரு பார்வையாளர் பகுதியானது ஜோன்சன் சாலஸ் எனும் பெயரில் குறிப்பிடப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.