ஸ்ரேயாவுக்கு கைகொடுக்கும் வில்லன்

வில்லன், குணசித்ர நடிகரான பிரகாஷ்ராஜ் இயக்குனராகவும் மாறி ‘டோனி’, ‘உன் சமையல் அறையில்’ படங்களை இயக்கினார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் படங்கள் இயக்கியவர் தற்போது பாலிவுட்டில் கைவரிசை காட்ட முடிவு செய்துள்ளார். தமிழில் சினேகாவுடன் இணைந்து தானும் நடித்திருந்த ‘உன் சமையல் அறையில்’ படத்தை இந்தியில் இயக்குவதுடன் தயாரிப்பு பொறுப்பும் ஏற்றிருக்கிறார். அப்படத்துக்கு ‘தட்கா’ என பெயரிட்டுள்ளார்.பாலிவுட் பரபரப்பு வில்லன் நானா படேகர் தமிழில் பிரகாஷ்ராஜ் ஏற்று நடித்த வேடத்தை ஏற்கிறார்.

சினேகா நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ரேயா நடிக்கிறார். கைவசம் படங்கள் இல்லாமல் ஓய்ந்துகிடக்கும் ஸ்ரேயாவுக்கு ‘பாகுபலி 2’ம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் அது கனவாகிப்போனதால் அப்செட் ஆனார். தற்போது அவருக்கு கைகொடுக்கும் விதமாக தனது படத்தில் நாயகியாக்கியிருக் கிறார் பிரகாஷ்ராஜ்.‘உன் சமையல் அறையில்’ படம் ஏற்கனவே ‘உலவச்சாரு பிரியாணி’ பெயரில் தெலுங்கிலும், ‘ஆக்கரனே’ பெயரில் கன்னடத்திலும் ஒரே நேரத்தில் இயக்கினார் பிரகாஷ்ராஜ். மலையாளத்தில் வெளியான ‘சால்ட் அண்ட் பெப்பர்’ படமே இப்பெயர்களில் ரீமேக் ஆனது.