அஸ்கிரிய பீடத்தின் 22 ஆவது மகாநாயக்கர் இன்று(07) தெரிவு செய்யப்படவுள்ளார்.
இந்தக் குறித்த நிகழ்வு அஸ்கிரிய மகா விகாரையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளது.
வணக்குத்திற்குரிய கலகம அத்ததஸ்ஸீ தேரரின் மறைவினை அடுத்து அஸ்கிரிய பீடத்தின் தலைமை பதவி வெற்றிடமானது.
இதற்கான தேர்வே இன்று இடம்பெறவுள்ளது.
வணக்குத்துக்குரிய அத்ததஸ்ஸி தேரர் கடந்த மாதம் 9 ஆம் திகதி குளியல் அறையில் வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.