பொலிஸ் மா அதிபரை புகழ்ந்த ஜனாதிபதி

பொலிஸ் மா அதிபரை புகழ்ந்த ஜனாதிபதி

தற்போதைய பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்னோனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புகழ்ந்து பாராட்டியுள்ளார். தாம் ஒய்வு பெற்றுக்கொள்வதாக பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளாக பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய என்.கே. இளங்கக்கோன் சிறந்த சேவையை வழங்கியுள்ளார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பதவியின்பெயரைக் காப்பாற்றிய பொலிஸ் மா அதிபராக என்.கே. இளங்கக்கோன் திகழ்கின்றார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.