எனது ஆட்சிக்காலம் முடிவதற்குள் ஐ.எஸ். அமைப்பை அழித்தே தீருவேன் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் மூத்த இராணுவத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய ஒபாமா, ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் பிடியிலுள்ள பகுதிகள், அவர்களது பொருளாதார பலம் மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவையை கைப்பற்றி ஐ.எஸ்.கிளர்ச்சியாளர்களை வீழ்த்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இதன்போது ராக்கா சம்பவம் குறித்து குறிப்பிட்ட ஒபாமா, இது போன்ற செயல்களை நாம் பொறுத்துக்கொள்ளக்கூடாது. எனது ஆட்சி முடிவதற்குள் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களை அழிக்க வேண் டும் என்பதை முதல் கட மையாக கொண்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.