பஷில் ராஜபக்ஷவிடம் விசாரணை

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக இன்று காலை 10 மணியளவில் அவர் அங்கு ஆஜராகியுள்ளார்.

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்.