கிரிக்கெட் இடைக்கால சபை அமைத்தால் பதவி விலகுவேன்: தயாசிறி

கிரிக்கெட் இடைக்கால சபை அமைத்தால் பதவி விலகுவேன்: தயாசிறி

கிரிக்கெட் இடைக்கால சபை அமைத்தால் தான் பதவி விலகுவேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முடிவு கிடைக்காவிட்டால் தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துவிட்டு வீடு செல்வதற்கு தான் தயாராக இருப்பதாகவும்
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விளையாட்டு சங்கங்களில் பல்வேறு மாபியாக்கள் செயற்பட்டு வருவதாகவும், அந்த மாபியாக்களை செயற்படுவதற்கு அரசியல்வாதிகளின் தலையீடுகள் காணப்படுவதாகவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.