உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஓகஸ்ட் மாதம்?

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஓகஸ்ட் மாதம் நடத்தப்படலாம் என, தேர்தல்கள் ஆணையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பாரிய சர்ச்சை ஏற்பட்டிருந்த நிலையில், இந்தத் தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் எல்லை நிர்ணய பணிகள் நிறைவடையாமையே இதற்குக் காரணம் என கூறப்பட்டது. எனினும் தற்போது அந்த நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும் இதனையடுத்து தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதன்படி ஓகஸ்ட் மாதமளவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் தினம் அறிவிக்கப்படலாம் என எதிர்பாக்கப்படுகின்றன