பனாமா பேப்பர்ஸ் சர்ச்சையில் சிக்கியதையடுத்து தனது வரி கணக்கை வெளி­யிட்ட பிரி­த்­தா­னிய பிர­த­மர்

பனாமா பேப்பர்ஸ் சர்ச்­சையில் சிக்­கி­ய­தை­ய­டுத்து பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கெமரூன் தனது பிரத்தியேக வரி கணக்கை வெளி­யிட்­டுள்ளார்.

1980களில் பஹாமாஸ் தீவில் பிளேர்மோர் வெளி­நாட்டு நிதி­யத்தை டேவிட் கெம­ரூனின் தந்தை உரு­வாக்­கினார் என்றும், அந் நிறு­வனம் பிரிட்­டனில் வரி செலுத்­த­வில்லை என்றும் பனாமா ஆவ­ணங்கள் தெரி­வித்­தி­ருந்­தன.

இதனை டேவிட் கெம­ரூனின் தந்தை இயன் கெமரூன் நிறு­வ­னத்தில் 1997 ஆம் ஆண்டு பங்­கு­களை வாங்­கி­ய­தாக ஒப்­புக்­கொண்ட டேவிட் கெமரூன், அதற்­கான அனைத்து வரி­க­ளையும் செலுத்­தி­விட்­ட­தாக தெரி­வித்­தி­ருக்­கிறார்.

வரி கட்­டா­ம­லி­ருக்கும் நோக்­கத்­துக்­காக தம் தந்தை இந்­ நி­று­வ­னத்தை உரு­வாக்­க­வில்லை என்றும் பங்­குச்­சந்தை வர்த்­த­கத்தை டொலர் மதிப்பில் செய்ய அனு­ம­திக்­கப்­பட்ட புதிய நடை­மு­றைக்­கேற்­பவே இந்­ நி­று­வ­னத்தை ஆரம்­பித்­த­தா­கவும் டேவிட் கெமரூன் தெரி­வித்­துள்ளார்.
இந்­நி­லை­லையில் டேவின் கெமரூன் தனது தனி நபர் வரி கணக்­கு­களை வெளி­யி­ட்டுள்ளார். மொத்தம் கடந்த ஆறு ஆண்­டு­க­ளுக்­கான வரி கணக்­குகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

2014 – 2015 நிதி ஆண்டில் 200.307 பவுண்கள் வரு­மா­னத்­துக்கு 75.898 பவுண்கள் வரி பண­மாக கட்­டி­யுள்­ளன.  அவ­ரது  140,522 பவுண் சம்­ப­ளத்­துக்கு, 9,834 பவுண்கள் கட்­சியின் செல­வுகள், லண்­டனில் உள்ள தனது குடும்­பத்தின் வாடகை வீடுகள் மூலம் 46,899 பவுண்கள், சேமிப்­புக்­கான வட்­டி­யாக 3,052 பவுண்கள் வரு­மா­ன­மாக கிடைத்­துள்­ள­தாக டேவிட் கெமரூன் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

டேவிட் கெமரூன் தனது வரி மற்றும் வருவாய் கணக்­கு­களை வெளி­யிட்­டுள்­ளதன் மூலம் பனாமா பேப்பர்ஸ் விவ­காரம் முடி­வுக்கு வரும் என்று எதிர்ப் ­பாக்­கப்­ப­டு­கி­றது.

 

தனது தந்­தையின் வெளி­நாட்டு நிறு­வனம் மூலம் பலன் அடைந்­த­தாகத் தற்­போது கெமரூன் ஒப்புக் கொண்­ட­தை­ய­டுத்து, அர­சியல் ரீதி­யாக கெம­ரூ­னுக்கு நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது.

பனாமா பேப்பர்ஸ் விவ­கா­ரத்தில் சிக்­கி­யுள்ள பிரித்­தா­னி­ய பிரதமர் டேவிட் கெமரூனை பதவி விலகக்கோரி ஆயிரக்கணக்கான மக்கள் லண்டனில் நேற்று முன்­தினம்  ஆர்­ப்­பாட்­­டத்தில் ஈடு­பட்­டுள்ளமை குறிப்பிடத்தக்கது.