கிரிக்கெட் குழுவின் செயலாளராக மற்றும் ஆலோசகராக அரவிந்த டி சில்வா’வினை நியமிப்பது குறித்து கிரிக்கெட் வாரியம் அவதானம் செலுத்தியுள்ளது.
புதிய கிரிக்கெட் குழுவின் சகாக்களாக குமார் சங்கக்கார , மஹேல ஜெயவர்தன மற்றும் ஹஷான் திலகரத்ன ஆகியோரினை நியமிக்க இருப்பதாகவும் கிரிக்கெட் வாரியத் தகவல்களால் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை; சனத் ஜயசூரிய’வினை புதிய கிரிக்கெட் குழுவிற்கு செயலாளராக நியமிக்க, விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதியினை பெற இன்றையதினம் (11) அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சுமதிபால மேலும் தெரிவித்துள்ளார்.
இன்னும், அரவிந்த டி சில்வாவின் செயலாளர் பதவியினது சேவைக்காலம் எதிர்வரும் 30ம் திகதியுடன் முடிவுக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், நடைபெறவுள்ள இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கான இலங்கை வீரர்கள் சனத் ஜயசூரிய மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோரின் கண்காணிப்பில் தெரிவு செய்யப்படவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.