
டெலிகொம் தலைவரின் வீட்டு வாடகை 7 இலட்சத்து 25ஆயிரம்: ஹரின் எதிர்ப்பு
டெலிகொம் நிறுவனத்தின் தலைவருக்கு 7இலட்சத்து 25ஆயிரத்திற்கு வீடு வாடகைக் கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க டெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த விடயத்திற்கு தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னான்டோ எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பீ்.ஜீ.சிறிசேனவுடன் தொடர்புகொண்ட போது அவர் தனக்கு சாதகமான பதிலை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்த விடயமாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பீ்.ஜீ.சிறிசேன ஜனாதிபதியின் சகோதரர் என்பது குறுப்பிடத்தக்கது.
