அமைச்சர் ஹரின்’க்கு எதிராக வழக்கு..

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ’வுக்கு எதிராக கொள்ளுப்பிட்டிய பொலிசினால் கொழும்பு கோட்டை நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தலங்கம வடக்கு, பொத்துஅர வீதியில் வசிக்கும் ஒன்ரி மைக்கல் பெர்னாந்து எனும் நபருக்கு நீச்சல் தடாக வளவில் 2015 April 22ம் திகதி தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பெயரிலேயே மேற்குறித்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

பொலிசினால் மேற்குறித்த வழக்கு நடுவர் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் ஹரின் இரு தடவைகள் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டும் அவர் முன்னிலையாகாத காரணத்தினால் குறித்த வழக்கு எதிர்வரும் May 5ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதோடு இரு தரப்பினரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறும் தெரிவித்துள்ளதாக  மேலும் தெரிவிக்கப்படுகின்றது.