இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கின் மனைவி கீதா பஸ்ரா கர்ப்பமாக இருப்பதால் விரைவில் அவர் தந்தையாக உள்ளார்.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்- பாலிவுட் நடிகை கீதா பஸ்ரா இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் இவர்களது திருமணம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமண வரவேற்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஐபிஎல் 9வது தொடரின் தொடக்க விழாவுக்கு ஹர்பஜன்சிங், தனது மனைவி கீதா பஸ்ராவுடன் வந்திருந்தார்.
எப்போதும் அழகான ஆடை, ’ஹை கீல்ஸ்’ செருப்பு என அசத்தும் கீதா பஸ்ரா, சாதாரணமாக ஒரு ஷு, லூசான ஒரு உடை அணிந்து கொண்டு வந்தார்.
மேலும், தனது வயிற்றையும் கைப்பையால் மறைத்துக் கொண்டிருந்தார். அவரது வயிறு லேசாக பெரிதாக இருந்தது. இதனால் விரைவில் தந்தையாகப் போகும் ஹர்பஜன் சிங்கிற்கு அங்கு வந்தவர்கள் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த கீதா படங்களில் நடிப்பதற்காக இந்தியா வந்து மும்பையில் தங்கியிருந்தார்.
தற்போது திருமணத்திற்கு பிறகு சினிமா படங்களில் நடிக்காமல் இருக்கும் கீதா பஸ்ரா, தனது தலை பிரசவத்திற்காக லண்டனில் உள்ள தனது தாய் வீட்டிற்கு விரைவில் செல்லவுள்ளார்.