கூட்டு எதிர்க்கட்சியினால் நடத்தப்படும் மே தினக் கூட்டத்தில் பங்கேற்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் மே மாதம் 1ம் திகதி கூட்டு எதிர்க்கட்சி கிருலப்பணையில் மே தினக் கூட்டத்தை நடாத்த உள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அறிவித்துள்ளார். மஹிந்த, தாம் ஓர் நிகழ்வில் பங்கேற்பதாக அறிவித்தால் நிச்சயமாக அதில் பங்கேற்பார்.
மே தினக் கூட்டத்தின் பிரதான பேச்சாளர்களில் ஒருவராக மஹிந்த மக்களுக்கு உரையாற்றுவார். சில ஊடகங்களும் சில தரப்பினரும் மஹிந்த கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என கூறிய போதிலும், நிச்சயமாக கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவார் என தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.