லசித் மாலிங்க’விற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை..

லசித் மாலிங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஊடகங்கள் முன்னிலையில் பலவிதமான கூற்றுக்களை முன்வைத்து கிரிக்கெட் வாரியத்துடனான வாதத்தில் ஈடுபட்டமை குறித்தும் , கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்தங்களை மீறியமை போன்றவற்றினை கருத்தில் கொண்டே மேற்படி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

”மாலிங்கவிற்கு ஒவ்வொரு முறையும் கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக முரணான கருத்துத் தெரிவிக்க எந்த உரிமையும் இல்லை.. அவர் அவரது ஒழுக்க விதிமுறைகளை மீறியுள்ளார்”

நாட்டிற்காக காலினையே இழந்து விளையாடிய வீரர்கள் வரலாற்றில் ஏராளமானோர் உள்ளனர். IPL போட்டியில் விளையாட காலில் எவ்வித உபாதையும் இல்லை. மாலிங்க கேட்டிருந்தார்; விளையாடுவது நாட்டிற்காகவா இல்லை எனக்காகவா(மாலிங்கவிற்காகவா) என்று.. எமக்கு எவரினதும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச வேண்டிய தேவையில்லை. மாலிங்கவிற்கு எதிராக கிரிக்கெட் நிர்வாகக்குழு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அமைச்சர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து கூறுகையில்;இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் உடற்கட்டமைப்பு குறித்து வீரர்களைப்போன்றே பயிற்சியாளர்களும் கவனம் செலுத்த வேண்டியது அவர்களது பொறுப்புக்களில் ஒன்று. உபாதைகள் இருப்பின் முன்கூட்டியே கிரிக்கெட் வாரியத்திற்கு அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.