மைத்ரி’யின் தம்பியால் 300 கோடி நட்டம்.. விசாரணைகள் விரைவில்..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான, டெலிகொம் மொபிடெல் தலைவர் குமாரசிங்க சிறிசேன அரசாங்கத்தின் கேள்விப்பத்திர நடைமுறையை மீறி செயற்பட்டுள்ளதாக தகவல்கள வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக மொபிடெல் நிறுவனத்திற்கு 20 மில்லியன் டொலர் (300 கோடி) வரை நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொபிடெல் காப்புறுதிக்கு குறைந்த கேள்விப்பத்திரத்தை யூனியன் இன்சுரன்ஸ் நிறுவனம் சமர்ப்பித்திருந்தது. இது 140 அமெரிக்க டொலர் மில்லியனாகும். யூனியன் இன்சுரன்ஸ் நிறுவனம் சமர்ப்பித்திருந்த கேள்விப்பத்திரத்தையே இரண்டு கேள்விப்பத்திர வாரியம் மூலம் மற்றும் மதிப்பிடும் குழுவின் மதிப்பீட்டின் பின்னர் பணிப்பாளர் சபை அனுமதித்திருந்தது.

எனினும் குமாரசிங்க சிறிசேனவினால் குறித்த கேள்விப்பத்திரத்தை யூனியன் காப்புறுதி நிறுவனத்திற்கு வழங்காமல் அதனை விட 20 மில்லியன் டொலர் அதிகமாக சமர்ப்பித்திருந்த ஸ்ரீலங்கன் இன்சுரன்ஸிற்கே வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் இன்சுரன்ஸ் முழுமையான அரசாங்க நிறுவனம் அல்ல அது அரை அரசாங்க நிறுவனமாகும். இதனால் மொபிடெல் நிறுவனத்திற்கு 300 கோடி நட்டத்தை ஏற்படுத்தியுள்ளார்.