இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகளின் போது போனஸ் புள்ளி வழங்கி வெற்றி அணியினை தீர்மானிப்பது குறித்து இங்கிலாந்தில் அவதானம் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இலங்கை கிரிகெட் வாரியத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.
இதேவேளை, டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் 6புள்ளிகள் (அல்லது 4), ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் வெற்றி பெரும் பட்சத்தில் 2புள்ளிகளும், டெஸ்ட் போட்டிகளில் போட்டி வெற்றி – தோல்வியின்றி முடிந்தால் தலா 2 புள்ளிகள் வீதமும் அணிக்கு வழங்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் மூலம் அதிகூடிய புள்ளிகளை பெரும் அணிக்கே வெற்றி கிடைக்கும். 2013ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையில் இடம்பெற்ற மகளிர் டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து மேற்கூறிய முறையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.